/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'70 வயது நிரம்பியவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வேண்டும் '
/
'70 வயது நிரம்பியவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வேண்டும் '
'70 வயது நிரம்பியவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வேண்டும் '
'70 வயது நிரம்பியவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வேண்டும் '
ADDED : ஜூலை 30, 2025 01:19 AM
கோவை; தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று டாடாபாத் சிவானந்தா காலனி அருகே, தர்ணாவில் ஈடுபட்டனர்.
70 வயதானவர்களுக்கு, 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம், மத்திய அரசின் 8வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துதல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்ணா நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். முன்னாள் பொதுச் செயலாளர் கிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினார்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பாதுகாப்பு இயக்கத்தினர், தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஓய்வூதியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.