/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் வழங்காததை கண்டித்து மறியலில் ஈடுபட்ட மக்கள்
/
குடிநீர் வழங்காததை கண்டித்து மறியலில் ஈடுபட்ட மக்கள்
குடிநீர் வழங்காததை கண்டித்து மறியலில் ஈடுபட்ட மக்கள்
குடிநீர் வழங்காததை கண்டித்து மறியலில் ஈடுபட்ட மக்கள்
ADDED : அக் 15, 2025 11:37 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அருகே பொன்னேகவுண்டனுார், குறிஞ்சேரி பகுதியில், குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து, அப்பகுதி மக்கள், தேவனுார்புதுார் ரோட்டில் குறிஞ்சேரி பிரிவு பஸ் ஸ்டாப் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறியதாவது: தென்குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னேகவுண்டனுார், குறிஞ்சேரி கிராமப்பகுதியில், அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மாதத்தில், 10 - 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதுவும் குறைந்த நேரம் மட்டுமே வழங்குவதால், பற்றாக்குறையாக உள்ளது. குடிநீருக்காக காலிக்குடங்களுடன் அலைய வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. கடந்த, நான்கு மாதங்களாக குடிநீர் முறையாக வினியோகம் இல்லை. இதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு, கூறினர்.
இதையடுத்து, போலீசார், ஒன்றிய அதிகாரிகள் பேச்சு நடத்தி குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தததால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.