தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பெரியார் நூலகத்துக்கு வராமல் மக்கள் ஒதுங்கினர்! மெகா ஊழலால் மனம் நொந்து விமர்சனம்

பெரியார் நூலகத்துக்கு வராமல் மக்கள் ஒதுங்கினர்! மெகா ஊழலால் மனம் நொந்து விமர்சனம்

பெரியார் நூலகத்துக்கு வராமல் மக்கள் ஒதுங்கினர்! மெகா ஊழலால் மனம் நொந்து விமர்சனம்

1


ADDED : நவ 07, 2026 06:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 06:59 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காந்திபுரம்: காந்திபுரத்தில் பெரியார் பெயரில் பிரமாண்டமாக 8 தளங்களுடன் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டிருக்கிறது. செம்மொழி பூங்கா திறந்தபோது, கூட்டம் அலைமோதியது. சனி, ஞாயிறு தினங்களில் போக்குவரத்து திணறும் அளவுக்கு குடும்பம் குடும்பமாக மக்கள் வந்தனர். நுழைவாயிலில் நிறுத்தி வைத்து, அனுப்பும் அளவுக்கு வந்தனர்.

இதேபோல், இந்நுாலகத்துக்கும் மக்களிடம் ஆர்வம் இருக்கும்; சாரை சாரையாக வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தலைகீழாக இருக்கிறது.

காலை 8 முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது. இருந்தாலும் தினமும் சொற்ப எண்ணிக்கையிலேயே மக்கள் வந்து செல்றனர். ஒவ்வொரு தளத்திலும் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. புத்தகம் வாசிக்க வருவோர் தங்களது பெயர் எழுதி, கையெழுத்திட அறிவுறுத்துகின்றனர்.

ஒரு தாளில் பாதியளவுக்கு கூட பெயர்கள் எழுதப்படுவதில்லை. அந்தளவுக்கே புத்தகம் வாசிக்க வந்தனர். புத்தக ஊழலை பெருமாள் முருகன் அம்பலப்படுத்திய குண்டு வெடித்த பின், அந்த கூட்டமும் குறைந்து போனது.

4வது தளத்தில் தமிழ் புத்தகப் பிரிவும், 5வது தளத்தில் ஆங்கிலப் புத்தகப் பிரிவும் செயல்படுகின்றன. இருக்கைகள், டேபிள்கள் போடப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையில் அமர்ந்து புத்தகங்கள் வாசிப்பதை பார்க்க முடிகிறது.

அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தினர் அப்படி என்னதான் புத்தகங்கள் வைத்திருக்கின்றனர் என்பதை பார்ப்பதற்காகவே சிலர் வருகின்றனர். ரேக்குகளில் உள்ள அப்புத்தகங்களை பார்த்து, சில புத்தகங்களில் சில பாராக்களை படித்துப் பார்த்து, மனம் நொந்து, போலி புத்தகம் என்பதை எளிதில் கண்டறிகின்றனர். இப்படியும் ஊழல், முறைகேடு செய்ய முடியுமா என வேதனைப்பட்டு செல்கின்றனர்.

நுாலகத்துக்கு குழந்தைகளோடு குடும்பத்தினர் வருகின்றனர். படிக்கட்டு வழியாக செல்கின்றனர். படிக்கட்டுகளில் ஆங்காங்கே நின்று செல்பி எடுக்கின்றனர். பின், நுாலகத்துக்குள் சென்று அறிவியல் சாதனங்களை ஒவ்வொரு அறையாகச் சென்று பார்வையிடுகின்றனர். பின், ‘ஸ்பேஸ் லிப்ட்’ மூலமாக 7வது மாடிக்குச் செல்கின்றனர். அங்குள்ள அறிவியல் படைப்புகளை பார்த்து விட்டு, வீட்டுக்குச் சென்று விடுகின்றனர்.

புத்தகப் பிரிவுக்கு செல்வதையே மக்கள் தவிர்க்கின்றனர், என்று ஊழியர்கள் கூறினர். ஆங்கில நுால்கள் பிரிவுக்குள் நாலைந்து பேரையே காண முடிந்தது. புத்தக ஊழல் வெளிச்சத்துக்கு வந்தபின், நுாலகத்துக்கு வருவோர் எண்ணிக்கை மேலும் சரிந்து விட்டதாக, ஊழியர்கள் வருத்தப்பட்டனர்.

தீபாவளி என்பதால், இன்று (நவம்பர் 8) ஒரு நாள் நுாலகத்துக்கு விடுமுறை என்றும், நாளை (திங்கள்) வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பை மற்றும் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதியில்லை என காவலர்கள் கூறுகின்றனர். பையை வாங்கி பத்திரப்படுத்துகின்றனர். ஆனால், மொபைல் போன் எடுத்துச் செல்வதை அவர்களால் தடுக்க முடிவதில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us