/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேச்சு திறமை உள்ளவர்கள் மேடை பேச்சாளர் ஆகலாம்!
/
பேச்சு திறமை உள்ளவர்கள் மேடை பேச்சாளர் ஆகலாம்!
ADDED : மே 30, 2025 11:59 PM
பொள்ளாச்சி; பேச்சு திறமை உள்ளவர்கள், தங்களை மேடை பேச்சாளர்களாக தயார்படுத்திக் கொள்ள முடியும், என, தெரிவிக்கப்பட்டது.
அருட்செல்வர் மகாலிங்கம் நினைவாக, சென்னை ராமலிங்கர் பணி மன்றம் வாயிலாக, பேச்சு, கவிதை, கட்டுரை, இசை மற்றும் மனப்பாட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், மாநில அளவில், முதல் 10 இடங்களில் வென்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கம், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. ராமலிங்கர் பணி மன்ற தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார்.
கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, 'தனித்திறன் வளர்த்தல்' என்ற தலைப்பில் பேச்சு திறமை உள்ளவர்கள் மேடை பேச்சாளர்களாக எவ்வாறு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்; புத்தக வாசிப்பின் சிறப்பு குறித்து பேசினார்.
முனைவர் சேதுபதி, 'கவிதை நேற்றும் இன்றும்' என்ற தலைப்பில் கவிதையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இதேபோல, கவிஞர் சுடர்விழி, பேச்சாளர்கள் போட்டிகளுக்கு தயார் ஆவது குறித்தும், அரிமளம் பத்மநாபன், 'இசையின் பல்வேறு பரிணாமங்கள், இசையை கற்று பயன்படுத்த வேண்டிய முறைகள்' குறித்தும் பயிற்சி அளித்தனர்.
இரண்டாம் நாள் அமர்வில், வக்கீல் பாலாசீனிவாசன் காப்பியங்கள் குறித்தும், எழுத்தாளர் வேணுகோபால் கட்டுரை இலக்கியம் குறித்தும், முனைவர் பாரதிராஜா, நாடகம் குறித்தும் பயிற்சி அளித்தனர். கல்லுாரி செயலாளர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.