/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு சீரமைப்பால் மக்கள் மகிழ்ச்சி
/
ரோடு சீரமைப்பால் மக்கள் மகிழ்ச்சி
ADDED : பிப் 20, 2025 11:24 PM

வால்பாறை; சோலையாறு டேம் பஜார் செல்லும் ரோடு சீரமைக்கபட்டதால், மக்கள் நிம்மதியடைந்தனர்.
வால்பாறையிலிருந்து, 28 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது சோலையாறுடேம். தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ள இந்தப்பகுதிக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், ஒரு கி.மீ., துாரம் உள்ள சோலையாறுடேம் பஜார் ரோடு, கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல், படுமோசமான நிலையில் காணப்பட்டது.
இதனால், இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ரோட்டை சீரமைக்க கோரி, இப்பகுதி மக்கள் போராடி வந்தனர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் பல முறை செய்தியும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், வால்பாறை நகராட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரோடு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதனால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் நிம்மதியடைந்தனர்.
இதையும் கவனியுங்க!
சோலையாறு டேமில் இருந்து, 7 கி.மீ., தொலைவில் ேஷக்கல்முடி எஸ்டேட் உள்ளது. இதை சுற்றிலும் கல்யாணப்பந்தல், முருகாளி, புதுக்காடு தொழிலாளர்கள் வசிக்கின்றனர். வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், ரோடு சீரமைக்காததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த ரோட்டை சீரமைக்க, 7 ஆண்டுகளாக மக்கள் மனு கொடுத்து வருகின்றனர். மழை காலத்துக்கு முன்பாக, நகராட்சி சார்பில் ேஷக்கல்முடி ரோட்டை சீரமைக்க வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.