தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கலைச்சங்கமத்தில் கலக்கிய கலைஞர்கள்

கலைச்சங்கமத்தில் கலக்கிய கலைஞர்கள்

கலைச்சங்கமத்தில் கலக்கிய கலைஞர்கள்


ADDED : பிப் 19, 2024 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 01:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை;கிராமிய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, நேற்று நடத்தப்பட்ட கலைச் சங்கமம் நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச் சங்கமம் நிகழ்ச்சி, காந்தி பார்க் அருகே குமாரசாமி குளக்கரையில் நேற்று நடந்தது.

இதில், கரகாட்டம், காவடி ஆட்டம், சிலம்பாட்டம், விழிப்புணர்வு நாடகங்கள் என, ஏழு பிரிவுகளில் கோவையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.

கிராமிய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சிலம்பாட்டம், கரகாட்டம், வள்ளி கும்மி ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கொங்கு மண்டலத்துக்கு பெயர் பெற்ற ஜமாப் இசைக்கு, பார்வையாளர்கள் மெய்மறந்து ஆட்டம் போட்டனர். நிகழ்ச்சியை, மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை துவக்கி வைத்தார். துணை மேயர் வெற்றிசெல்வன், உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us