/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகுதிநேர ஆசிரியர்களின் நிரந்தர கோரிக்கை 'நிரந்தரம்'
/
பகுதிநேர ஆசிரியர்களின் நிரந்தர கோரிக்கை 'நிரந்தரம்'
பகுதிநேர ஆசிரியர்களின் நிரந்தர கோரிக்கை 'நிரந்தரம்'
பகுதிநேர ஆசிரியர்களின் நிரந்தர கோரிக்கை 'நிரந்தரம்'
ADDED : ஏப் 16, 2025 10:21 PM
கோவை; பகுதிநேர ஆசிரியர்களின் ஒரே கோரிக்கை, பணி நிரந்தரம் மட்டும்தான். சட்டசமையில்; 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிக்க வேண்டும் என, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது:
தி.மு.க.,வினர் எதிர்க்கட்சியாக இருந்த போது, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய சட்டசபையில் கோரிக்கை வைத்து பேசினர். கடந்த சட்டசபை தேர்தலில், பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதியும் அளித்தனர்.
தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்த தி.மு.க., நான்கு ஆண்டுகள் ஆகியும் பகுதிநேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்யவில்லை.
பணி நிரந்தரம் கேட்டு, தொடர் போராட்டம் நடத்திய போது, 2500 ரூபாய் சம்பள உயர்வு மற்றும் 10 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு அறிவிக்கப்பட்டது. சம்பள உயர்வு மட்டும் கிடைத்தது. மருத்துவ காப்பீடு கிடைக்கவில்லை. எங்கள் ஒரே கோரிக்கை, பணி நிரந்தரம் மட்டும்தான். சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.