/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
37வது ஐ.எம்., நார்ம் குளோஸ்டு செஸ்: சம புள்ளிகளுடன் பெரு, இந்திய வீரர்கள்
/
37வது ஐ.எம்., நார்ம் குளோஸ்டு செஸ்: சம புள்ளிகளுடன் பெரு, இந்திய வீரர்கள்
37வது ஐ.எம்., நார்ம் குளோஸ்டு செஸ்: சம புள்ளிகளுடன் பெரு, இந்திய வீரர்கள்
37வது ஐ.எம்., நார்ம் குளோஸ்டு செஸ்: சம புள்ளிகளுடன் பெரு, இந்திய வீரர்கள்
ADDED : நவ 25, 2025 07:02 AM
கோவை: தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், 37வது ஐ.எம்., நார்ம் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி கடந்த, 22 முதல், 28ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் வெளிநாடுகளை சேர்ந்த ஐவர், இந்தியாவை சேர்ந்தஐவர் என, 10 பேர் விளையாடி வருகின்றனர்.
நான்காம் சுற்று போட்டியில், இந்திய வீரர்களான சர்வேஸ்வரன் மற்றும் சரணர்த்தி விரேஷ் ஆகியோருக்கு இடையேயான போட்டியும், இந்திய வீரர் ஆகாஷ், பெரு வீரர் கார்லோமக்னோ ஒப்லிடாஸ் ஆகியோருக்கு இடையேயான போட்டியும், பெலாரஸ் வீரர் எவ்ஜெனீ போடோல்சென்கோ, கியூபா வீரர் கோமேஸ் சஞ்செஸ் ஆகியோருக்கு இடையேயான போட்டியும் சமனில் முடிந்தது.
பல்வேறு போட்டிகளை அடுத்து நான்காம் சுற்று முடிவில், பெரு வீரர் கார்லோமக்னோ ஒப்லிடாஸ், இந்திய வீரர் ஆகாஷ் ஆகியோர், தலா மூன்று புள்ளிகள் வென்றுள்ளனர்.
பெலாரஸ் வீரர் எவ்ஜெனீ போடோல்சென்கோ, இந்திய வீரர் ஜெய்தம்பரீஷ், இந்திய வீரர் சர்ணர்த்தி விரேஷ் ஆகியோர் தலா, 2.5 புள்ளிகளும் பெற்றனர். அர்ஜென்டினா வீரர் ரவுல் கிளவெரி இரண்டு புள்ளிகளும், இந்திய வீரர் சம்யக் தாரேவா, 1.5 புள்ளியும் பெற்றனர்.
கொலம்பியா வீரர் வில்சன் கில்லெர்மோ பாலென்சியா மோராலஸ், கியூபா வீரர்கோமேஸ் சஞ்செஸ், இந்திய வீரர் சர்வேஸ்வரன் ஆகியோர், தலா ஒரு புள்ளியும்பெற்றுள்ளனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.

