/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் கல்யாணி நலம் அதிகாரிகள் சான்றிதழ்
/
பேரூர் கல்யாணி நலம் அதிகாரிகள் சான்றிதழ்
ADDED : ஜூலை 28, 2025 09:48 PM

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணியின் உடல்நலம் குறித்து ஆய்வு செய்த வனத்துறையினர், யானை நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது கல்யாணி யானை; 33 வயது. யானையின் உடல்நலம் குறித்து, வனத்துறையினர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்வது வழக்கம்.
கல்யாணி யானையின் உடல் நலம் குறித்து, உதவி வனப்பாதுகாப்பாளர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.ஆய்வில், கல்யாணி யானை, 4,555 கிலோ எடையுடன், நல்ல உடல் நலத்துடன் உள்ளதும், தினசரி நடைப்பயிற்சி மற்றும் பழங்கள் கொடுக்க வேண்டும் என, வனத்துறையினர், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.
ஆய்வின்போது, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலா, பேரூர் கால்நடை உதவி டாக்டர் சாந்தி, கோவை வனச்சரகர் திருமுருகன், வனக்கால்நடை டாக்டர் வெண்ணிலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.