UPDATED : நவ 04, 2026 10:29 AM
ADDED : நவ 04, 2026 10:24 AM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்:
வாழையில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து, வேளாண் கல்லூரி மாணவிகள், மேட்டுப்பாளையம் அருகே செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
கோபியில் உள்ள ஜே.கே.கே. முனி ராஜா வேளாண் அறிவியல் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள், 10 பேர், கடந்த இரண்டு மாதங்களாக காரமடை பகுதியில், விவசாயிகளுடன் இணைந்து களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறை ஊராட்சி கிராமங்களில், வாழை அதிகளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. நேற்று வாழை பயிர் செய்துள்ள விவசாயிகளை சந்தித்து, வாழையில் பூச்சி தாக்குவதை கட்டுப்படுத்துவது குறித்து, மாணவிகள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
