/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாம்பை வீட்டிற்குள் வர விடாமல் தடுத்த வளர்ப்பு நாய்கள்
/
பாம்பை வீட்டிற்குள் வர விடாமல் தடுத்த வளர்ப்பு நாய்கள்
பாம்பை வீட்டிற்குள் வர விடாமல் தடுத்த வளர்ப்பு நாய்கள்
பாம்பை வீட்டிற்குள் வர விடாமல் தடுத்த வளர்ப்பு நாய்கள்
ADDED : ஜூலை 15, 2025 10:10 PM

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே பாம்பை வீட்டிற்குள் வர விடாமல் தடுத்த வளர்ப்பு நாய்கள், வீடியோ வைரல் ஆகி வருகிறது.
கோவை மாவட்டம் காரமடை கன்னார்பாளையம் அருகே அர்ச்சனா அவன்யூ பகுதியில் மனோஜ், 35 என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சந்தை வியாபாரி. அவரது வீட்டில் 2 வளர்ப்பு நாய்கள் உள்ளன.
நேற்று இவரது வீட்டு காம்பவுண்டிற்குள் 6 அடி நீள சாரை பாம்பு ஒன்று வந்தது. பாம்பு வருவதை கண்ட வளர்ப்பு நாய்கள் பாம்பை வீட்டினுள் வரவிடாமல் தடுத்து தொடர்ந்து குரைத்தன.
இதனால் பாம்பு, நாய்களுக்கு பயந்து அங்கிருந்த காருக்குள் புகுந்தது. பின் பாம்பினை அருகில் உள்ள இளைஞர் ஒருவர் பிடித்து வெளியே விட்டார். பாம்பை நாய்கள் விரட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
----