தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரொட்டிக்கடையில் சிறுத்தை உலா கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

ரொட்டிக்கடையில் சிறுத்தை உலா கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

ரொட்டிக்கடையில் சிறுத்தை உலா கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை


UPDATED : நவ 20, 2026 07:28 PM

ADDED : நவ 20, 2026 07:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 07:28 PM ADDED : நவ 20, 2026 07:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை, ரொட்டிக்கடை பகுதியில் முகாமிட்டுள்ள சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை பகுதியில், கடந்த சில நாட்களாக பகல், இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை முகாமிட்டு, வீடுகளில் வளர்க்கப்படும் பிராணிகளை கவ்வி செல்கிறது. பகல் நேரத்தில் கூட சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் வந்து செல்வதால், அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

மக்கள் கூறியதாவது:

சமீப காலமாக, ரொட்டிக்கடை பகுதியில் சிறுத்தை முகாமிட்டு, மக்களை அச்சுறுத்தி வருகிறது. குடியிருப்பை ஒட்டி அங்கன்வாடி அமைந்துள்ள நிலையில், அடிக்கடி சிறுத்தை வந்து செல்வதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா கூறியதாவது:

சிறுத்தைக்கு பிடித்தமான நாய், கோழி, பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளை வீடுகளில் வளர்ப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும். சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சிறுத்தை நடமாடும் பகுதியில் வசிக்கும் மக்கள், மாலை நேரத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதையும், இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us