/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு தடுக்க கோரி மனு
/
பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு தடுக்க கோரி மனு
ADDED : டிச 17, 2025 05:18 AM
கருமத்தம்பட்டி: சின்ன மோப்பிரிபாளையத்தில் பள்ளி நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க வேண்டும், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வாகராயம்பாளையம் அடுத்த சின்ன மோப்பிரிபாளையத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், கலெக்டரிடம் அளித்த மனு விபரம் :
சின்ன மோப்பிரிபாளையத்தில், 75 ஆண்டுகளுக்கு முன்பு வரை, 25 சென்டில் பள்ளி இயங்கி வந்தது. சுற்றுவட்டாரத்தில் புதிய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் துவக்கப்பட்டதால், அந்த பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால், பல ஆண்டுகளுக்கு முன் அப்பள்ளி மூடப்பட்டது.
அதன்பிறகு, பயன்பாட்டில் இல்லாமல் இருந்த அந்த பள்ளி கட்டடத்தில், இருந்த ஓடுகள், மரச்சட்டங்கள் ஆகியவற்றை, அதே பகுதியை சேர்ந்த சிலர் எடுத்து சென்றுவிட்டனர்.
அந்த இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயல்படுகின்றனர். உடனடியாக விசாரித்து ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

