/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வியாபாரி கொலை வழக்கில் விசாரணை இடம் மாற்ற மனு
/
வியாபாரி கொலை வழக்கில் விசாரணை இடம் மாற்ற மனு
ADDED : மார் 18, 2025 11:22 PM
கோவை; கோவை, உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாரூக்,31; திராவிடர் விடுதலை கழக உறுப்பினரான இவர், 2017, மார்ச் 16ல் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, அக்ரம் ஜிந்தா,32, சதாம் உசேன், 35, சம்சுதின்,38, உக்கடம் அன்சாத்,37, ஜாபர் அலி,36, அப்துல்முனாப்,38, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வழக்கின் சாட்சி விசாரணை, மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. சாட்சியளிக்க வந்த நேருதாஸ் என்பவருக்கு, கோர்ட் வளாகத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்ததால், ஆறு பேருக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, காணொலி வாயிலாக ஆறு பேரும் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, விசாரணை ஏப்., 16க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில், சாட்சி விசாரணையை, வேறு இடத்திற்கு மாற்ற கோரி, அரசு தரப்பில் மனு தாக்கல் செய்தனர்.