/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டு போட்டிக்கு ஊக்குவிப்பதில்லை; உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி
/
விளையாட்டு போட்டிக்கு ஊக்குவிப்பதில்லை; உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி
விளையாட்டு போட்டிக்கு ஊக்குவிப்பதில்லை; உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி
விளையாட்டு போட்டிக்கு ஊக்குவிப்பதில்லை; உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி
ADDED : ஆக 01, 2025 07:21 PM
பொள்ளாச்சி; அரசு மேல்நிலைப் பள்ளிகளில், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மாணவர்களை ஊக்குவிப்பதில்லை, என, உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அதிக மாணவர்களை உள்ளடக்கிய பெரும்பாலான அரசு பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இவர்கள், விளையாட்டில் ஆர்வம் கொள்ளும் மாணவர்களை, போட்டிகளுக்கு தயார்படுத்துகின்றனர்.
குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறை வாயிலாக ஆண்டுதோறும் நடத்தப்படும், வட்டார, மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் மட்டுமின்றி, கலைத்திருவிழா போட்டிகள், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார்படுத்துகின்றனர்.
இருப்பினும், சில பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள், போட்டிகளில் பங்கேற்க மாணவர்களை ஊக்குவிப்பதில்லை என, உடற்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர், மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளுக்கு இடமாறுதல் பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:
பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானம், உபகரணங்கள் இல்லாததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கபடி, கோ-கோ, சிலம்பம் உள்ளிட்ட சில போட்டிகளுக்கு மட்டுமே மாணவர்களை தயார்படுத்த முடிகிறது.
இது ஒருபுறமிருக்க, ஆய்வு கூட்டத்தின் போது, பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மட்டுமே கேள்வி எழுப்பப்படுகிறது. விளையாட்டு சாதனைகள் குறித்து கேட்கப்படுவதில்லை.
இதனால், சில தலைமையாசிரியர்கள், மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க விருப்பம் தெரிவிப்பதில்லை. தேர்ச்சி விகிதத்தை போல, விளையாட்டு போட்டிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.