/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைப்பு; சீரமைப்பு பணிகள் தீவிரம்
/
குழாய் உடைப்பு; சீரமைப்பு பணிகள் தீவிரம்
ADDED : ஜன 05, 2025 10:17 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி ராஜாமில் ரோடு சந்திப்பு பகுதியில், குழாய் உடைப்பு ஏற்பட்டதால், நகராட்சி அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள மக்களுக்கு அம்பராம்பாளையம் ஆற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டு, மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர் உந்து நிலையம் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஒன்பது உயர் மட்ட குடிநீர் தேக்க தொட்டி, இரண்டு தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், வெங்கடேசா காலனி தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து செல்லும் குடிநீர் பகிர்மான குழாய், ராஜாமில் ரோடு - தபால் அலுவலக ரோடு சந்திப்பு பகுதி, கோர்ட் அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு நீர் விரயமானது.
இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள், உடனடியாக குடிநீர் வினியோகத்தை நிறுத்தம் செய்து, உடைப்பு ஏற்பட்ட இடத்தில், 'பொக்லைன்' கொண்டு தோண்டி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வெங்கடேசா காலனி தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து, பகிர்மான குழாய் வழியாக ெஷரிப் காலனி, ஏ.பி.டி.,வீதி, மார்க்கெட் ரோடு, திருநீலகண்டர் வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இங்குள்ள குழாய் உடைப்பு ஏற்பட்டவுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழாயினை சுற்றிலும், அனைத்து தொலை தொடர்பு கேபிள்களும் செல்வதால், சீரமைப்பு பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
தற்போது, சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, கேபிள் துண்டிக்கப்பட்டு புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.