/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடப்பாண்டு 3,067 சாலை பணிகள் 'ஓவர்' : மீதியை இம்மாதத்துக்குள் முடிக்க திட்டம்
/
நடப்பாண்டு 3,067 சாலை பணிகள் 'ஓவர்' : மீதியை இம்மாதத்துக்குள் முடிக்க திட்டம்
நடப்பாண்டு 3,067 சாலை பணிகள் 'ஓவர்' : மீதியை இம்மாதத்துக்குள் முடிக்க திட்டம்
நடப்பாண்டு 3,067 சாலை பணிகள் 'ஓவர்' : மீதியை இம்மாதத்துக்குள் முடிக்க திட்டம்
UPDATED : டிச 18, 2025 09:34 AM
ADDED : டிச 18, 2025 05:03 AM
கோவை: நடப்பாண்டு, 3,067 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், மீதப்பணிகளை இம்மாதத்துக்குள் முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
பல்வேறு பணிகளுக்காக வெட்டப்பட்ட சாலைகளை சீரமைக்க, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம் உள்ளிட்டவற்றின் வாயிலாக ரூ.415.06 கோடி மதிப்பீட்டில், 5,215 சாலை பணிகள், 860.69 கி.மீ., நீளத்துக்கு முடிக்கப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டு, 3,456 தார் சாலைகள், 503.678 கி.மீ., நீளத்திற்கு புதுப்பிக்க ரூ.200 கோடி நிதி அனுமதிக்கப்பட்டு, 3,067 பணிகள், 443.63 கி.மீ., நீளத்திற்கு முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் இம்மாதத்துக்குள் முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.200 கோடி மதிப்பீட்டில், 1,949 சாலைகளில், 25 ஆயிரத்து, 93 சதுர மீட்டருக்கு தார் ஒட்டு(பேட்ச் ஒர்க்) அமைக்கும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. 'அம்ரூத்' திட்டத்தில் ரூ.591.14 கோடியில் குறிச்சி-குனியமுத்துார் பகுதிகளில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்துவருகின்றன.
இதில், 3 கோடியே, 5 லட்சத்து, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, 41 ஆயிரத்து, 318 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படுகிறது. இதுவரை, 7,435 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
'அம்ரூத் 2.O திட்டத்தில் ரூ.922.16 கோடி மதிப்பிலான யு.ஜி.டி., பணிகள் வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலுார் பகுதிகளில் நடக்கிறது. 55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதில், 3 கோடியே, 49 லட்சத்து, 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, 33 சதவீதம் முடிந்துள்ளது. 67 ஆயிரத்து, 545 வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.
ரூ.318 கோடி மதிப்பீட்டில் வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள், 55 சதவீதம் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் நடந்துவரும் நிலையில், 16 ஆயிரத்து, 90 வீட்டு இணைப்பு கள் வழங்கப்படவு ள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.

