/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் நிலத்தில், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
/
கோவில் நிலத்தில், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
ADDED : டிச 04, 2024 10:22 PM

சூலுார்; அரசூரில் கானவேட பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
வனத்துறை, அரசூர் ஊராட்சி மற்றும் சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய குறுங்காடுகள் திட்டத்தின் கீழ், அரசூர் கான வேட பெருமாள் கோவில் நிலத்தில், அறநிலையத்துறை அனுமதியுடன், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
சாந்தி கியர்ஸ் தலைமை செயல் அதிகாரி கருணாகரன், ஊராட்சி தலைவர் மனோன்மணி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகரன், துணை பொறியாளர் சதீஷ், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தன்ராஜ், அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் , தன்னார்வலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், நிறுவன பணியாளர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
சுற்றுச்சூழல் மேம்படவும், தூய்மையான காற்று மற்றும் மழை பெறவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சாந்தி கியர்ஸ் நிர்வாகிகள் கூறினர்.