தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பசுமை மயமாக்க மரக்கன்றுகள் நடவு 

 பசுமை மயமாக்க மரக்கன்றுகள் நடவு 

 பசுமை மயமாக்க மரக்கன்றுகள் நடவு 


ADDED : ஜூலை 13, 2026 08:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 08:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில், மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

பொள்ளாச்சி நகராட்சி சார்பில், பசுமை மயமாக்கல் திட்டத்தில், நெடுஞ்சாலையோரங்கள், பொது இடங்கள், பூங்காக்களில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. முதற்கட்டமாக, பொள்ளாச்சி சி.டி.சி., மேடு புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே, 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நகராட்சி கமிஷனர் குமரன் கூறுகையில், ''பொள்ளாச்சி நகரில் ரவுண்டானாக்களில் செடிகள் வளர்த்து, பாரம்பரிய சிலைகள் வைத்து அழகுப்படுத்தப்படுகிறது. நகரை பசுமை மயமாக்கும் திட்டத்தில், மரக்கன்றுகள் நடப்படுகின்றன. காலி இடங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

''உரக்கிடங்கு பகுதிகளிலும், அடர்வனம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து, பசுமை மயமாக்கல் திட்டத்தை நகராட்சி மேற்கொள்கிறது,'' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us