/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடவு
/
அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடவு
ADDED : ஜூலை 16, 2025 11:10 PM

தொண்டாமுத்தூர்; கோவை லேடீஸ் சர்க்கிள் கிளப் சார்பில், தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
கோவை லேடீஸ் சர்க்கிள் கிளப் சார்பில், பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் விழா, தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளி வளாகத்தில், 6 அடி உயரமுள்ள நாட்டு மரக்கன்றுகளை, கோவை ஏ.சி.எம்.சி., லேடீஸ் சர்க்கிள் கிளப் தலைவர் கீர்த்தனா தலைமையிலான குழுவினர், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுடன் இணைந்து நடவு செய்தனர்.
இம்மரக்கன்றுகள், முழுமையாக வளர்வதை உறுதி செய்யும் வகையில், ஓராண்டுக்கு அதனை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர். இவ்விழாவில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.