/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் ஒழிப்பு தின விழிப்புணர்வு
/
பிளாஸ்டிக் ஒழிப்பு தின விழிப்புணர்வு
ADDED : ஜூலை 08, 2025 08:46 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கோடங்கிப்பட்டி பள்ளி மாணவர்கள், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பிளாஸ்டிக் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதில், பள்ளி ஆசிரியர் சத்தியா, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால், புவி வெப்பமயமாதல், பருவமழை குறைபாடு, காலம் தவறி மழை பெய்தல், மழைநீர் நிலத்தினுள் செல்லாமல் பாதிப்பு, சீதோஷ்ண நிலையில் மாற்றம், உடல் நலக்கேடுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, டையாக்சின் வாயு சுவாசிப்பதால் ஏற்படும் சுவாச கோளாறுகள் குறித்து விளக்கினார்.
பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, மாணவ, மாணவியர் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி சார்பில், மஞ்சள் பை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர் தினகரன் செய்திருந்தார்.

