/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவு குவிப்பு வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்
/
திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவு குவிப்பு வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்
திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவு குவிப்பு வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்
திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவு குவிப்பு வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம்
ADDED : ஜன 23, 2025 11:23 PM

வால்பாறை,; வால்பாறையில், திறந்தவெளியில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில்வனவிலங்குகளும், பசுமை மாறாக்காடுகளும், நீர்நிலைகளும் நிறைந்துள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பால், திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவுகள் வீசப்படுகின்றன.
குறிப்பாக, ஆழியாறில் இருந்து வால்பாறை வரும் வழியில், பல இடங்களில் சுற்றுலா பயணியர் சாலையோரங்களிலும், வனப்பகுதியிலும் விட்டுசென்ற பிளாஸ்டிக் குப்பை அகற்றாமல் உள்ளது. மழை காலங்களில் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் ஆற்றில் கலந்து விடுகிறது.
இது தவிர, வால்பாறை நகரில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் அதிக அளவில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்களை பயன்படுத்துகின்றனர். திறந்தவெளி குப்பை கிடங்கில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால், தான் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், பிளாஸ்டிக் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தும், அதை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதால், பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:
வால்பாறையில் பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். குறிப்பாக, வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியரிடம் ஆழியாறு செக்போஸ்ட்டில் பிளாஸ்டிக் சேமிப்பு மையம் ஏற்படுத்த வேண்டும். நுழைவு சீட்டு வழங்கும் போது வாகனங்களை சோதனை செய்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இயற்கை வளத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

