/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் அசத்தல்
/
போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் அசத்தல்
போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் அசத்தல்
போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் அசத்தல்
ADDED : மே 14, 2025 11:46 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் மறைந்த எஸ்.ஐ.,பாஸ்கரன் நினைவு 6ம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மறைந்த எஸ்.ஐ.,பாஸ்கரன் நினைவாக 6ம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டிகள், கோவை ரூரல் எஸ்.பி.,கார்த்திகேயன் உத்தரவின்படி, மேட்டுப்பாளையம் உட்கோட்ட டி.எஸ்.பி., அதியமான் முன்னிலையில், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த போலீசார் கிரிக்கெட் அணிகள் உட்பட 16 அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை மேட்டுப்பாளையம் அணியும், இரண்டாம் பரிசை குரும்பபாளையம் அணியும், மூன்றாம் பரிசை மருதூர் அணியும், நான்காம் பரிசை பாஸ்கரன் மெமோரியல் கிரிக்கெட் கிளப் மேட்டுப்பாளையம் அணியும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன், ஈரோடு மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு, மேட்டுப்பாளையம் எஸ்.ஐ.,க்கள் ஆனந்தகுமார், மகாராஜா, சதீஷ் பாபு, சிறப்பு எஸ்.ஐ., கங்காதரன் உள்ளிட்டோர் வழங்கினர். முதல் பரிசு தொகை ரூ.10,006 இரண்டாம் பரிசு ரூ.6,006, மூன்றாம் பரிசு ரூ. 3,006, நான்காம் பரிசு ரூ.2,006 வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டது.-----