/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோ-கோ போட்டியில் வீரர் வீராங்கனைகள் ஆக்ரோஷம்
/
கோ-கோ போட்டியில் வீரர் வீராங்கனைகள் ஆக்ரோஷம்
ADDED : ஆக 29, 2025 01:32 AM

கோவை; சிங்காநல்லுாரில் உள்ள தியாகி என்.ஜி.ஆர்., பள்ளியில் கோ-கோ போட்டிகள் நேற்று துவங்கியது; இன்றும் நடக்கிறது. மாணவர்கள் பிரிவில், 43 பள்ளிகள், மாணவியர் பிரிவில், 39 பள்ளிகள் என, 82 அணிகள் பங்கேற்றுள்ளன. 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வமுடன் களம் இறங்கியுள்ளனர்.
நேற்று நடந்த மாணவர்களுக்கான போட்டியில், தியாகி என்.ஜி.ஆர்., பள்ளி அணி, 17-2 என்ற புள்ளிகளில், எம்.எஸ்.எஸ்.டி., அணியை வென்றது. மாணவியருக்கான போட்டியில் டி.கே.எஸ்., பள்ளி அணி, 12-3 என்ற புள்ளிகளில் டி.இ.எல்.சி., பள்ளி அணியை வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.
'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடக்கும் நிலையில், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளில் இருந்து தலா, 12 வீரர், வீராங்கனைகள் கோவை மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, மாநில அளவிலான போட்டிக்கு தயார்படுத்தப்பட உள்ளனர்.

