/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 1 இயற்பியல், பொருளியல் தேர்வு ரொம்ப ஈசி: மாணவ, மாணவியர் 'சென்டம்' எதிர்பார்ப்பு
/
பிளஸ் 1 இயற்பியல், பொருளியல் தேர்வு ரொம்ப ஈசி: மாணவ, மாணவியர் 'சென்டம்' எதிர்பார்ப்பு
பிளஸ் 1 இயற்பியல், பொருளியல் தேர்வு ரொம்ப ஈசி: மாணவ, மாணவியர் 'சென்டம்' எதிர்பார்ப்பு
பிளஸ் 1 இயற்பியல், பொருளியல் தேர்வு ரொம்ப ஈசி: மாணவ, மாணவியர் 'சென்டம்' எதிர்பார்ப்பு
ADDED : மார் 12, 2024 09:50 PM

- நிருபர் குழு -
பிளஸ் 1, இயற்பியல் பொதுத்தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாவும், அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என, மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ்1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 37 மையங்களில் நேற்று நடந்தது. மாணவர்கள், இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன் தேர்வுகளை எழுதினர். அதன்படி, இயற்பியல் தேர்வை, 2,019 மாணவர்கள், 2,624 மாணவியர் என, 4,643 பேர் எழுதினர். 15 மாணவர்கள், 29 மாணவியர் என, 44 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர்.
இதேபோல, பொருளியல் தேர்வை, 1,567 மாணவர்கள், 1,608 மாணவியர் என, 3,175 பேர் எழுதினர். 36 மாணவர்கள், 14 மாணவியர் என, 50 பேர் தேர்வு எழுதவில்லை. வேலைவாய்ப்புத் திறன் தேர்வை, 167 மணவர்கள், 37 மாணவியர் என, 204 பேர் எழுதினர். 29 மாணவர்கள், 211 மாணவியர் என, 240 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
தேர்வு குறித்து மாணவர்கள் கருத்துவருமாறு:
சாந்தி பள்ளி மாணவி தாட்சாயிணி: இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. அவற்றில், ஓரிரு வினாக்கள் பாடத்தின் உள்ளே இருந்த கேட்கப்பட்டிருந்தது. இருப்பினும், முன்னரே தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்ததால், அனைத்திற்கும் எளிமையாக விடை எழுத முடிந்தது. குறிப்பாக, 5 மதிப்பெண் வினாக்கள், முந்தைய பொதுத்தேர்வில் இடம்பெற்றிருந்தன. முழு மதிப்பெண்கள் கிடைக்கும்.
பாலஸ்ரீவந்த்: இயற்பியல் தேர்வில் இரண்டு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. அதேநேரம், மூன்று மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. எதிர்பாராத சில வினாக்கள், பாடத்தின் உள்ளே இருந்து இடம்பெற்றிருந்தன. இதனால், விடை எழுத சற்று சிரமமாக இருந்தது. தேர்வு முடியும் நேரத்திற்கு முன்னரே விடைகளை எழுதிவிட்டேன். எதிர்பார்க்கும் மதிப்பெண் கிடைக்கும் என, நம்புகிறேன்.
நாச்சியார் பள்ளி மாணவர் சச்சின்: தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்ததால், இயற்பியல் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு விரைந்து விடை எழுதினேன். பயிற்சி பெற்றிருந்த வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கப் பெறும்.
மாணவி தனுஜாஸ்ரீ: பொருளியல் தேர்வில், ஒன்று, இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்து. அதில், ஒரு மதிப்பெண் வினாக்கள், புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தது. அனைத்து வினாக்களுக்கும் சரியான பதில் எழுதியுள்ளேன். அதிக மதிப்பெண் கிடைக்கும்.
மாணவி ஸ்ரீகாவியா: இயற்பியல் தேர்வில் வினாக்கள் எளிமையாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதினேன். குறிப்பாக, கட்டாய வினாக்கள் மிகவும் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள் 'டிவிஸ்ட்' செய்து கேட்கப்பட்டிருக்கும் என, எதிர்பார்த்தேன். ஆனால் ஈசியாக இருந்தது; அதிக மதிப்பெண் கிடைக்கும்.
உடுமலை
உடுமலையில், பிளஸ் 1 பொதுத்தேர்வு, 18 மையங்களில் நடக்கிறது. நேற்று இயற்பியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கான தேர்வு நடந்தது. தேர்வுகள் குறித்து, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூறியதாவது:
நவீன்குமார்: பொருளாதாரம் பாடத்தேர்வு எளிமையாகவே இருந்தது. மூன்று மதிப்பெண் வினாக்களில் மட்டும், பாடத்தின் உட்பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்டிருந்தனர். ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் சுலபமாக விடை எழுதும் வகையில் கேட்கப்பட்டன. முந்தைய தேர்வுகளில் வந்த வினாக்களே அதிகமாக வந்துள்ளன. இதனால் விரைவாக விடை எழுத முடிந்தது.
ஆதிசக்தி: பொருளியலில், இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்களில், இரண்டு குழப்பும் வகையில் வந்திருந்தது. ஆனாலும், கடினமாக இல்லை. ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் பயிற்சி செய்த வினாக்களாக தான் இருந்தன. அனைத்து மாணவர்களும் எளிமையாக இருந்தது. இதனால், அதிக மதிப்பெண் கிடைக்கும்.
மொகமதுஹர்சத்: பொருளியல் பாடப்பகுதிகளை புரிந்து படித்துக்கொண்டதாலும், பள்ளியில் பயிற்சித்தேர்வுகள் வைத்ததாலும் வினாத்தாள் கடினமாக தெரியவில்லை. சில பகுதிகளில் பயிற்சி செய்யாத வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இருப்பினும் அனைத்து மாணவர்களுக்கும் சுலபமான வினாத்தாளாக தான் பொருளியல் தேர்வு இருந்தது.
சீரலன்: இயற்பியலில், ஒன்று, இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிமையாகவும், சுலபமாக விடை எழுதுவதாகவும் இருந்தது. ஐந்து மதிப்பெண் பகுதியில் சில வினாக்கள் மட்டும் குழப்பும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. ஆனாலும் அனைவருக்கும் ஓரளவு எளிமையான வினாத்தாளாகவே இருந்தது.
ரூஸ்வெல்ட் சாம்அசர்: இயற்பியலில், ஐந்து மதிப்பெண் வினாப்பகுதி மட்டும் கடினமாக இருந்தது. மற்ற பகுதி வினாக்கள் இதற்கு முன்பே பயிற்சி தேர்வுகளில் வந்துள்ளன. இதனால் விடை எழுவதும் எளிதாக இருந்தது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறலாம். பள்ளிகளில் தேர்வுகள் அதிகம் வைத்ததால் தேர்வு எளிமையாக இருந்தது.

