/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப். , 4ம் தேதி துவக்கம்
/
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப். , 4ம் தேதி துவக்கம்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப். , 4ம் தேதி துவக்கம்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப். , 4ம் தேதி துவக்கம்
ADDED : மார் 26, 2025 10:23 PM
கோவை:
கோவை மாவட்டத்தில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி, மூன்று மையங்களில் ஏப்., 4ம் தேதி துவங்குகிறது.
தமிழகத்தில், 2024-25ம் கல்வியாண்டுக்கான பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த, 3 முதல், 25ம் தேதி வரை நடந்தது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 128 மையங்களில், 363 பள்ளிகளை சேர்ந்த, 34 ஆயிரத்து, 958 மாணவர்கள் தேர்வு எழுதினர். தவிர, தனித்தேர்வர்கள், 581 பேர் எழுதினர்.
தேர்வு முடிந்த நிலையில், விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு நேற்று முதல், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நகராட்சி பெண்கள் பள்ளியிலும், கோவை கல்வி மாவட்டத்தில் சர்வஜன பள்ளி, அவிலா பள்ளிகளிலும் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது.
ஏப்., 4 முதல், 17ம் தேதி வரை முதன்மை விடைத்தாள் திருத்துபவர்களாக நியமிக்கப்படும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.
அதன்படி, மூன்று மையங்களிலும், 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்களை திருத்த உள்ளனர்.
பின்னர் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு மே 9ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.