/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருந்து சீட்டு இல்லாமல் வந்தால் 'நோ' கூரியர் மையங்களில் ஸ்கேனர் அவசியம் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க போலீசார் அறிவுரை

ADDED : மார் 27, 2025 11:18 PM

மேட்டுப்பாளையம்: மருந்துக்கடைகளில் மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் கொடுக்கக்கூடாது.
கூரியரில் போதைப்பொருள் வருகிறதா என ஸ்கேனர் வாயிலாக பரிசோதனை செய்ய வேண்டும் என போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான் தலைமையில், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் முன்னிலையில், கூரியர் சர்வீஸ் உரிமையாளர்கள் மற்றும் மருந்துக் கடை உரிமையாளர்களுடன் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூரியர் மற்றும் மருந்துக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான் கூறியதாவது:-
கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் கூரியர் வாயிலாக வருகிறது. இதை தடுப்பதற்காக, கூரியர் கடை உரிமையாளர்களுடன், கூட்டு ஆலோசனை கூட்டம் நடத்தினோம். அப்போது, கூரியர் மையங்களில் கண்டிப்பாக ஸ்கேனர் இருக்க வேண்டும்.
வரும் பொருட்களை ஸ்கேன் செய்து தான் கூரியர் அனுப்ப வேண்டும். சந்தேகத்திற்குரிய பொருட்கள் வந்தால் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என அவர்களிடம் அறிவுறுத்தினோம்.
அதே போல் மருந்துக்கடை உரிமையாளர்களிடமும், ஆலோசனை மேற்கொண்டோம். அவர்களிடம், மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் கொடுக்கக்கூடாது. அனைத்து கடைகளிலும் இதுதொடர்பாக போர்டு ஒன்று முன்பகுதிகளில் வைக்க வேண்டும். அதே போல் என்.டி.பி.எஸ்.,லிஸ்ட்டில் உள்ள மருந்துகளை எக்காரணத்தை கொண்டும் மருத்துவர் பரிந்துரை இன்றி கொடுக்கக்கூடாது.
மருத்துகளின் இருப்பு தொடர்பாக மருந்துக்கடைகளில் ரிஜிஸ்டர் சரியாக பராமரிக்க வேண்டும். போலீசார் அவ்வப்போது வந்து சோதனை செய்வார்கள்.
மயக்க மருந்து, வலி நிவாரணி மருந்துகளை அடிக்கடி வந்து கேட்பவர்கள் விபரத்தை போலீசாருக்கு கண்டிப்பாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.