/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறையில் கைதி மர்ம மரணம் போலீசார் தீவிர விசாரணை
/
சிறையில் கைதி மர்ம மரணம் போலீசார் தீவிர விசாரணை
ADDED : ஜன 28, 2025 07:31 AM
கோவை : கோவை மத்திய சிறையில், சந்தேகத்துக்கு இடமான வகையில், கைதி உயிரிழந்த நிலையில், கொலையா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், கையிருப்பு சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ஏசுதாஸ், 33. 2012ம் ஆண்டு திருப்பூரில் நடந்த கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்றார். 2023 டிச., முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு, தொழிற்சாலை பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
நேற்று மதியம் 12:00 மணிக்கு கழிப்பறை சென்றவர், அங்கு மயங்கி விழுந்தார். சிறைக்காவலர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, ஏசுதாஸ் உயிரிழந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், மயங்கி விழுந்ததில், கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு அழுத்தியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக, முதற்கட்ட விசாரணையில் டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், கழுத்தில் தசை சிதைந்து காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, போலீசார் சிறை தொழிற்சாலை பிரிவில் பணிபுரிந்த, பிற கைதிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.