/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மளிகைப்பொருட்கள் வாங்கி கோடிக்கணக்கில் மோசடி காத்திருந்து 'பொட்டலம்' போட்ட போலீசார்
/
மளிகைப்பொருட்கள் வாங்கி கோடிக்கணக்கில் மோசடி காத்திருந்து 'பொட்டலம்' போட்ட போலீசார்
மளிகைப்பொருட்கள் வாங்கி கோடிக்கணக்கில் மோசடி காத்திருந்து 'பொட்டலம்' போட்ட போலீசார்
மளிகைப்பொருட்கள் வாங்கி கோடிக்கணக்கில் மோசடி காத்திருந்து 'பொட்டலம்' போட்ட போலீசார்
ADDED : டிச 21, 2024 11:22 PM

கோவை: மளிகை பொருட்கள் வாங்கி, பணம் கொடுக்காமல் மோசடி செய்து வந்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டை சேர்ந்தவர் தனலட்சுமி, 41. இவர் மிளகு வியாபாரம் செய்து வந்தார். கோவையை சேர்ந்த கருப்புசாமி, அவரை தொடர்பு கொண்டு, இரண்டு டன் மிளகு தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
ரூ. 14 லட்சம் மதிப்புள்ள இரண்டு டன் மிளகை, சேலத்தில் இருந்துஅனுப்பி வைத்தார். அதை கோவை ராமதாநபுரம் பகுதியில் பெற்றுக்கொண்ட கருப்புசாமி, ரூ.14 லட்சத்துக்கான காசோலையை கொடுத்துள்ளார். அதை தனலட்சுமி வங்கியில் செலுத்திய போது, பணம் இல்லாமல் திரும்பியது.
தனலட்சுமி கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கருப்புசாமி இதேபோல் பலரிடம் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. கருப்புசாமி மீது கோவை ராமநாதபுரம், பீளமேடு, சாய்பாபா காலனி, சூலுார் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், 19 வழக்குகள் இருப்பதும், சுமார் ரூ.2 கோடிக்கும் மேல் மோசடி நடத்தியிருப்பதும் தெரியவந்தது.
பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு, பல மாதங்களாக போலீசார் கண்ணில் சிக்காமல் இருந்து வந்துள்ளார் கருப்புசாமி. போலீசார்கருப்புசாமியின் மொபைல் எண்ணை வைத்து, அவரைதேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மொபைல் எண்ணை, 'சுவிட்ச் ஆப்' செய்து வைத்திருந்ததால், அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.எப்போது போனை 'ஆன்' செய்வார் என, போலீசார் காத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மொபைல் 'ஆன்' செய்யப்பட்டுள்ளது. அவர், சின்னவேடம்பட்டியில் இருப்பதாக, போலீசாருக்கு 'லோகேஷன்' காட்டியது.
போலீசார் அங்கு சென்று பார்த்த போது, கருப்பசாமி சொகுசு காரில் தி.மு.க., கரை வேட்டியுடன், மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணனை சந்திக்க காத்திருப்பது தெரிந்தது. போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.