/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் சந்தேகத்துக்குரிய 40 நபர்களின் சமூக வலைதளங்களை முடக்கியது போலீஸ்
/
கோவையில் சந்தேகத்துக்குரிய 40 நபர்களின் சமூக வலைதளங்களை முடக்கியது போலீஸ்
கோவையில் சந்தேகத்துக்குரிய 40 நபர்களின் சமூக வலைதளங்களை முடக்கியது போலீஸ்
கோவையில் சந்தேகத்துக்குரிய 40 நபர்களின் சமூக வலைதளங்களை முடக்கியது போலீஸ்
ADDED : ஜூலை 17, 2025 11:03 AM
கோவை: கோவையில், சந்தேகத்துக்குரிய மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட, 40 நபர்களின் சமூக வலைதளங்களை, போலீசார் முடக்கியுள்ளனர்.
கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின், பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள், அவர்களால் மூளைச்சலவை செய்யப்படும் நபர்கள் குறித்தும் கண்காணித்து, கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
சமூக வலைதளங்களில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்கள் பதிவிடுதல் குறித்தும் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற கருத்துகளை பதிவிட்ட 40 நபர்களின் சமூக வலைதளங்களை, போலீசார் முடக்கியுள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'கோவையில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்படும் வகையில், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், சந்தேகத்துக்கு இடமான வகையிலும் கருத்துக்களை பதிவிட்டவர்கள் பயன்படுத்தி வந்த சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களது சமூக வலைதளங்களை ஏராளமானோர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். தற்போது முடக்கப்பட்டதால், அவர்களால் செயல்பட முடியாத நிலை உள்ளது. அவர்கள் மீண்டும் சமூக வலைதள பக்கம் துவங்கி, பழைய நிலைக்கு வருவது கடினம்' என்றனர்.