/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிகளை மீறும் லாரிகள் பறிமுதல் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
/
விதிகளை மீறும் லாரிகள் பறிமுதல் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
விதிகளை மீறும் லாரிகள் பறிமுதல் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
விதிகளை மீறும் லாரிகள் பறிமுதல் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
ADDED : ஜூன் 20, 2025 11:53 PM

கோவை : மாநகர பகுதிகளில் விதிகளை மீறி இயங்கும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என, போலீஸ் கமிஷனர் எச்சரித்தார்.
கோவை மாநகர பகுதிகளுக்குள், லாரிகள் வந்து செல்ல நேரக்கட்டுப்பாடுகள் உள்ளன. காலை, மாலையில் 'பீக் ஹவர்ஸ்'ல் லாரிகள் நகருக்குள் வந்து செல்லக்கூடாது.
இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால், பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதிப்பதில்லை.
அதிவேகம், சாலையின் வலது புறத்தில் வாகனத்தை இயக்குவது, மொபைல் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதுமட்டுமல்லாமல், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி ஒரு சிலர் சிட்டிக்குள் நுழைகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடந்த ஐந்து மாதத்தில், லாரிகளால் மட்டும் 34க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 14 அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவிக்கையில், ''லாரிகளால் ஏற்படும் விபத்துகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வாரம், சரவணம்பட்டி பகுதியில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒன்பது வயது சிறுவன் மற்றும் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லாரி ஓட்டுநர்கள் சாலை விதிகளை, கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறி லாரிகளை இயக்கினால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுவது மட்டுமல்லாமல் லாரி பறிமுதல் செய்யப்படும்,'' என்றார்.