ADDED : செப் 17, 2025 09:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் ; த.வெ.க., தலைவர் விஜய்யை தவறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் த.வெ.க.,வினர் புகார் அளித்துள்ளனர்.
கோவையில் கடந்த 14ம் தேதி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க., தலைவர் விஜய்யை தவறாகவும், சமூகத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பேசியதாக கூறி த.வெ.க., நகர செயலாளர் காஜா மொய்தீன், மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், புகார் மனு அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.----