/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனம் இடித்ததில் தகராறு இருவர் மீது போலீசார் வழக்கு
/
வாகனம் இடித்ததில் தகராறு இருவர் மீது போலீசார் வழக்கு
வாகனம் இடித்ததில் தகராறு இருவர் மீது போலீசார் வழக்கு
வாகனம் இடித்ததில் தகராறு இருவர் மீது போலீசார் வழக்கு
ADDED : ஜூன் 01, 2025 07:06 AM
கோவை : தடாகம் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் மீது, மற்றொரு பைக் மோதியதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக இருவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கவுண்டம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கண்ணபிரான், 41. இவர் தனது இருசக்கர வாகனத்தில் தடாகம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த தடாகம் புதுாரை சேர்ந்த சதீஷ்குமார், 37 என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வளைவில் திருப்பும் போது, கண்ணபிரான் மீது மோதினார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணபிரான், தனது ஹெல்மெட்டை கழற்றி சதீஷ்குமாரை தாக்கினார். பதிலுக்கு சதீஷ்குமார் கற்களை எடுத்து கண்ணபிரானை தாக்கினார். இதில் இருவருக்கும் தலையில் காயம் பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரை சமாதானப்படுத்தி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக, கவுண்டம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கண்ணபிரான், சதீஷ்குமார் ஆகிய இருவர் மீதும், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.