/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருந்துக்கடைகளுக்கு போலீசார் அறிவுறுத்தல்
/
மருந்துக்கடைகளுக்கு போலீசார் அறிவுறுத்தல்
ADDED : மார் 28, 2025 10:13 PM
கோவை; போதைப்பொருட்களை பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக, மாவட்ட பகுதிகளில் உள்ள மருத்துக்கடை மற்றும் கூரியர் நிறுவனங்களுடன், போலீசார் ஆலோசனை மேற்கொண்டனர்.
கோவை மாவட்ட பகுதிகளில், போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த எஸ்.பி., கார்த்திகேயன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய உட்கோட்டங்களின் டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் சர்வீஸ் நிறுவன உரிமையாளர்களுடன், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், மருத்து கடை உரிமையாளர்களுக்கு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து வழங்க கூடாது எனவும், மயக்க மருந்து, வலி நிவாரணி மருந்துகளை கேட்டு, அடிக்கடி வருபவர்கள் குறித்த விபரங்களை, போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்க வேண்டும் எனவும், அறிவுரை வழங்கப்பட்டது.
கூரியர் சர்வீஸ் நிறுவனங்களுக்கு, வழக்கமாக கூரியர் அனுப்பும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
சந்தேகப்படும் வகையில் பார்சல் வந்தால், போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.