மது விற்றவர் கைது
பொள்ளாச்சி அருகே சமத்துாரில், கோட்டூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, டாஸ்மாக் மதுக்கடை அருகே சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன்,28, என்பதும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதற்காக மதுபான பாட்டில்கள் வைத்து இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, 11 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற 9 பேர் கைது
பொள்ளாச்சி அருகே, அங்கலகுறிச்சியில் ஆழியாறு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட போது, அங்கலகுறிச்சி கைகாட்டி பஸ் ஸ்டாப் அருகே, சந்தேகப்படும் படி நின்று கொண்டு இருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்,28, நாகலட்சுமி,30, என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனைக்காக வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, 100 கிராம் கஞ்சா, மொபைல்போன், பைக், 1,500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஆனைமலை அருகே, ராமசந்திராபுரம் பஸ் ஸ்டாப் அருகே கஞ்சா விற்பனைக்காக வைத்து இருந்த ஆனைமலையை சேர்ந்த சந்தோஷ்குமார்,26, மனோஜ்குமார், 24, பூபாலன்,24 ஆகியோரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

