/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முள்ளி வனப்பகுதியில் போலீசார் சோதனை
/
முள்ளி வனப்பகுதியில் போலீசார் சோதனை
ADDED : ஜூலை 14, 2025 11:06 PM

மேட்டுப்பாளையம்,; காரமடை அருகே முள்ளி வனப்பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே முள்ளி மற்றும் பில்லூர் டேம் வனப்பகுதி, கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
பில்லூர் டேம் வனப்பகுதி அருகே அண்மையில் போலீசார் ரோந்து சென்ற போது, குந்தா ஆற்றின் கரையோரம் கள்ளச்சாராயம் காய்ச்ச, சாராய பொருட்களை ஊற வைத்திருந்த கேரளவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து வனப்பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சப்படுகிறதா என கண்காணிக்க, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னகாமணன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை முள்ளி வனப்பகுதியில் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.------