UPDATED : நவ 10, 2026 09:50 AM
ADDED : நவ 10, 2026 09:46 AM

அ நிறம் | அளவு
ஆனைமலை: ஆனைமலை அருகே, போலீசார், ‘ட்ரோன்’ வாயிலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை நாளை கொண்டாட பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டாடி மகிழ்ந்தனர். அதில், ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதி நீர்நிலைகளில் ஆழமான பகுதிகளுக்கு செல்கின்றனரா என்பதை போலீசார் கண்காணிப்பு செய்தனர்.
ஆனைமலை இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், எஸ்.ஐ., ஸ்டீபன் மற்றும் போலீசார், ‘ட்ரோன்’ வாயிலாக கண்காணிப்பு செய்தனர்.
நீர்நிலைகள் மட்டுமின்றி, பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக அமர்ந்து மதுபானம் குடிக்கின்றனரா என்பதையும் கண்காணித்தனர்.
