/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளிமாநில தொழிலாளர்கள் பதிவு அவசியம்; எஸ்டேட் நிர்வாகத்திற்கு போலீசார் எச்சரிக்கை
/
வெளிமாநில தொழிலாளர்கள் பதிவு அவசியம்; எஸ்டேட் நிர்வாகத்திற்கு போலீசார் எச்சரிக்கை
வெளிமாநில தொழிலாளர்கள் பதிவு அவசியம்; எஸ்டேட் நிர்வாகத்திற்கு போலீசார் எச்சரிக்கை
வெளிமாநில தொழிலாளர்கள் பதிவு அவசியம்; எஸ்டேட் நிர்வாகத்திற்கு போலீசார் எச்சரிக்கை
ADDED : அக் 19, 2025 09:10 PM
வால்பாறை: உரிய ஆவணமின்றி வெளிமாநில தொழிலாளர்களை எஸ்டேட் நிர்வாகங்கள் பணியில் அமர்த்தக்கூடாது, என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு கடந்த, 2001ம் ஆண்டில் சம்பளம் குறைக்கப்பட்டதாலும், வனவிலங்கு- மனித மோதலாலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறி, தொழில் நகரமான திருப்பூர், கோவை, ஈரோடு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வந்த நிலையில், தற்போது, 20 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள், அசாம், பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநில தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தியுள்ளனர்.
வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில், தற்போது, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், பெரும்பாலான எஸ்டேட் நிர்வாகங்கள் அவர்களிடம் உரிய ஆவணமின்றி பணியில் அமர்த்தியுள்ளனர்.
வெளிமாநில தொழிலாளர்களின் முழுவிபரங்களை பதிவு செய்வது அவசியம். அந்த தகவல்களை போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
தேயிலை எஸ்டேட்களில், வெளிமாநில தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முன், எஸ்டேட் நிர்வாகங்கள் அவர்களிடம் இருந்து போட்டோ, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை வாங்கி பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.
அந்த தகவல்களை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களில் சமர்பிக்க வேண்டும். எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் வெளிமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது.
இவ்வாறு, கூறினர்.

