/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குற்ற செயல்களை தடுக்க துப்பாக்கியுடன் போலீஸ்
/
குற்ற செயல்களை தடுக்க துப்பாக்கியுடன் போலீஸ்
ADDED : மார் 23, 2025 11:27 PM

கோவை : கோவை மாவட்ட பகுதிகளில், குற்ற செயல்களை தடுக்கும் வகையில், உட்கோட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள ஆறு உட்கோட்டங்களிலும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், வால்பாறை, கருமத்தப்பட்டி, பொள்ளாச்சி, பேரூர் ஆகிய ஆறு உட்கோட்டத்தில் உள்ள முக்கிய சந்திப்புகளில், குற்றம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து ஒரு எஸ்.ஐ., மூன்று போலீசார் என நான்கு பேர் கொண்ட குழுவினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தங்களது பகுதிகளில் நடக்கும் குற்றச்சம்பவங்கள் குறித்து, பொது மக்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 -81212, வாட்ஸ் அப் எண் 77081 -00100 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் நபர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என, எஸ்.பி., தெரிவித்துள்ளார்.