ஓட்டு சாவடிகள் சீரமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம்
ஓட்டு சாவடிகள் சீரமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம்
UPDATED : அக் 22, 2026 06:41 PM
ADDED : அக் 22, 2026 06:36 PM
சூலூர்:
ஓட்டு சாவடிகள் சீரமைப்பது தொடர்பாக, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் சூலூரில் நடந்தது.
சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டு சாவடிகளை சீரமைப்பது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்டு அறிக்கை அளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சூலூர் தாலுகா அலுவலகத்தில், தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரும், நகர்புற நிலவரி உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
வாக்காளர் பதிவு அலுவலர் பேசியதாவது:
நடந்து முடிந்த தேர்தலில், சூலூர் சட்டசபை தொகுதியில், 139 இடங்களில், 385 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டன. 1200 ஓட்டுக்கு மிகாமல் இந்த ஓட்டு சாவடிகள் உள்ளன. ஓட்டு சாவடியை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும், ஓட்டு சாவடியை வேறு கட்டடத்துக்கு மாற்ற வேண்டும், ஒரு ஓட்டுசாவடியில் இருக்கும் வார்டை, வேறு ஓட்டு சாவடிக்கு மாற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்தால், கட்சி பிரதிநிதிகள் மனுவாக அளிக்கலாம். அவை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜ., த.வெ.க.,உன்னிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை கூறினர்.
