/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டல அளவிலான கிரிக்கெட் அசத்தும் பாலிடெக்னிக் வீரர்கள்
/
மண்டல அளவிலான கிரிக்கெட் அசத்தும் பாலிடெக்னிக் வீரர்கள்
மண்டல அளவிலான கிரிக்கெட் அசத்தும் பாலிடெக்னிக் வீரர்கள்
மண்டல அளவிலான கிரிக்கெட் அசத்தும் பாலிடெக்னிக் வீரர்கள்
ADDED : ஜன 20, 2025 06:57 AM
கோவை, : பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையே, ஆண்களுக்கான மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி, கடந்த 18 முதல், 21ம் தேதி வரை நடக்கிறது.
பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, மருத்துவக்கல்லுாரி மைதானங்களில் நடக்கும் இப்போட்டியில், 14 அணிகள் பங்கேற்றுள்ளன. பாலிடெக்னிக் கல்லுாரி வார்ப்படவியல் துறை தலைவர் அரசு போட்டிகளை துவக்கி வைத்தார்.
நேற்று நடந்த காலிறுதி முதல் போட்டியில், ஸ்ரீ ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லுாரி அணியும், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி அணியும் மோதின.
பேட்டிங் செய்த ரங்கநாதர் கல்லுாரி அணி, 25 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 120 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய, ராமகிருஷ்ணா கல்லுாரி அணி, 19.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு, 57 ரன்கள் எடுத்தது. இரண்டாம் போட்டியில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணியும், இந்துஸ்தான் பாலிடெக்னிக் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பி.எஸ்.ஜி., அணியினர், 25 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 189 ரன்கள் எடுத்தனர். இந்துஸ்தான் அணியினர், 18.5 ஓவரில், 94 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
பி.எஸ்.ஜி., வீரர் விஷ்ணுவர்தன் அதிகபட்சம், 59 ரன்கள் எடுத்ததுடன், 3.5 ஓவரில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.