/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு வித்யாலயா பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்
/
நேரு வித்யாலயா பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 14, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பொங்கல் விழாகொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் மகாவீர் போத்ரா தலைமை வகித்து, நிகழ்வுகளை துவக்கிவைத்தார்.
பள்ளி வளாகத்தில், புதுப்பானையில் பொங்கல் வைத்து, சூரிய வழிபாடு செய்யப்பட்டது. புத்தாடை அணிந்து உற்சாகமாக வந்த மாணவர்கள், கிராமிய கலைநிகழ்வுகளில் பங்கேற்று அசத்தினர்.
மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் பங்கஜ், கோவை நலச்சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள் சம்பாலால் பாப்னா, ராஜேஷ் சாஜத், ஹேமந்த் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.