/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா
/
அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2025 06:32 AM

அன்னுார்; அன்னுார் தாலுகாவில் அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா நேற்று நடந்தது.
அன்னுார் தாலுகா அலுவலக வளாகத்தில், வண்ணக் கோலமிட்டு பொங்கல் வைக்கப்பட்டது. ஜமாப் குழுவினர் ஜமாப் இசை இசைத்தனர். ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஜமாப் இசைக்கு ஏற்ப நடனம் ஆடினர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. தாசில்தார் குமரி ஆனந்தன், துணை தாசில்தார் ரேவதி மற்றும் தாலுகா அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.
அன்னுார் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா நடந்தது. பொங்கல் வைக்கப்பட்டு, பேரூராட்சி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.
வடக்கலூர், கரியாம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நேற்று பொங்கல் விழா நடந்தது. ஊராட்சி ஊழியர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம்
கோவை மாவட்டம் காரமடை நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. விழாவில், நகரமன்ற தலைவர் உஷா, கமிஷனர் மதுமதி ஆகியோர் பங்கேற்று புது பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து படையல் இட்டு, அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது நகராட்சியின் அனைத்து அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.