/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகாபோதி போகர் தியான குடிலில் பொங்கல் விழா
/
மகாபோதி போகர் தியான குடிலில் பொங்கல் விழா
ADDED : ஜன 20, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : சூலுார் அடுத்த பாப்பம்பட்டி மகாபோதி போகர் தியான குடில் வளாகத்தில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஒயில் கும்மி, வட்ட கும்மி மற்றும் நீல மலையின மக்களின் பாடல்கள், நடனங்கள் நடந்தன. பழமொழி, விடுகதை கூறுதல், கிராமிய பாடல்கள் பாடுதல், பழங்கால உணவு முறைகளை கூறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
சிலம்பம், கம்பு சுற்றுதல் நடந்தன. போட்டிகளில் வென்றவர்களுக்கு பீடத்தின் தலைவர் ஆதிசக்தி மாயோனி, செயலர் கோவிந்த ராஜ் அறங்காவலர் பூபதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். சிவக்குமார், மின்னல் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.