/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
/
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 17, 2026 05:05 AM

தொண்டாமுத்தூர்: -: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தைப்பொங்கல் விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தைப்பொங்கல் திருநாளான நேற்று அதிகாலையிலேயே, பொதுமக்கள் தங்களின் வீடுகளில் புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பச்சரிசி பொங்கல் வைத்து, சூரியனை குடும்பத்துடன் வழிபட்டனர்.
தொடர்ந்து, கிராமப்புறங்களில் உள்ள கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். வீட்டிற்கு வந்த உறவினர்கள், நண்பர்களுடன் ஒன்றாக உணவருந்தி மகிழ்ச்சியை பரிமாறினார். அதன்பின், ஊர் மைதானங்களில், பொங்கல் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டிருந்த பொம்மை கடைகளில் பொருட்களை வாங்கியும், ராட்டினத்தில் விளையாடியும், பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.
ஊரின் ஒவ்வொரு பகுதிகளிலும், பொங்கல் பண்டிகையொட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

