ADDED : ஜன 08, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; சூலுார் பேரூராட்சி சார்பில், தூய்மை பணியாளர்களுக்கான மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடந்தன. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் போட்டிகளை துவக்கி வைத்தார்.
கும்மி பாட்டு, லெமன் ஸ்பூன், லக்கி கார்னர், பலுான் உடைத்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
வெற்றி பெற்றவர்களுக்கு, பேரூராட்சி தலைவர் தேவி, செயல் அலுவலர் சரவணன், துணைத்தலைவர் கணேஷ் ஆகியோர் பரிசு வழங்கினர். வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.