/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை நிறுவனங்களில் பொங்கல் விழா உற்சாகம்
/
கோவை நிறுவனங்களில் பொங்கல் விழா உற்சாகம்
ADDED : ஜன 14, 2025 06:49 AM

கனரா வங்கி
கனரா வங்கியின் கோவை மண்டல அலுவலகத்தில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. துணைப் பொது மேலாளர் ரத்தீஸ் சந்திரஜா தலைமை வகித்தார்.
அலுவலக வளாகத்தில் வண்ண கோலங்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். வங்கியின் அதிகாரிகள், பணியாளர்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.
'காட்சியா'
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பாக (காட்சியா) சார்பில், ஈச்சனாரி விநாயகர் கோவில் அருகில் அமைந்துள்ள தோட்டத்தில், பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சங்க உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சங்கத்தின் தலைவர் விஜயகுமார், துணைத்தலைவர் செவ்வேள், செயலாளர் ராஜரத்தினம், பொருளாளர் மணிகண்டன் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தோடு பங்கேற்று, விழாவை சிறப்பித்தனர்.
பரிபூர்ணாஸ் ஐஸ்வர்யம்
மாதம்பட்டி அருகே குப்பனுாரிலுள்ள பரிபூர்ணாஸ் ஐஸ்வர்யம் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நடந்த பொங்கல் விழாவில், 110 மாற்றுத்திறனாளிகளுக்கு, பொங்கல் பரிசு மற்றும் 15 நாட்களுக்கு தேவையான மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது. பரிபூர்ணா ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் மாதம்பட்டி தங்கவேல், சொற்பொழிவாளர் சுகிசிவம் மற்றும் ஆகியோர் வழங்கினர்.

