/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோற்றுத்துறை நாதர் கோவிலில் பூ பொங்கல்
/
சோற்றுத்துறை நாதர் கோவிலில் பூ பொங்கல்
ADDED : ஜன 18, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகரில் உள்ள சோற்றுத்துறை நாதர் கோவிலில் நேற்று பூ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில், சொர்ண விநாயகருக்கு பூ பொங்கல் வைக்கும் நிகழ்வு நடந்தது.
நிகழ்ச்சியில், மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து சாணம் மற்றும் மஞ்சள் கொண்டு வைக்கப்பட்ட பிள்ளையாரை, தை மாதம் பூ பொங்கல் தினமான நேற்று விநாயகர் முன் வைத்து வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, இந்த பிள்ளையாரை வட்டமிட்டபடி பாட்டுப்பாடி கும்மி அடித்தனர். அதன்பின் அவற்றை ஆற்றில் விசர்ஜனம் செய்து சொர்ண விநாயகரை வழிபட்டனர்.