/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அஞ்சல் ஊழியர் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
அஞ்சல் ஊழியர் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 17, 2024 11:37 PM
கோவை : அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், கோவை தலைமை அஞ்சலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க குரூப் 'சி' அமைப்பினர், மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
ஒரு கட்டமாக, தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் - குரூப் 'சி' ஆகியவற்றின் அங்கீகார நீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
அங்கீகார உத்தரவுக்கு எதிராக, ராஞ்சி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை, மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், கோவை தலைமை அஞ்சலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அஞ்சல் -- 4 கோட்ட தலைவர் பழனிசாமி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் வெங்கட்ராமன், அஞ்சல் -3 மாநில உதவி தலைவர் ராமச்சந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.