தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உருளைக்கிழங்கு ரவா ஸ்நாக்

 உருளைக்கிழங்கு ரவா ஸ்நாக்

 உருளைக்கிழங்கு ரவா ஸ்நாக்


ADDED : மார் 01, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 06:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ரவையை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு பச்சை உருளைக்கிழங்கின் தோலைச் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கிச் சேர்க்கவும். இந்த ரெசிபியின் ரகசியமே நாம் சேர்க்கும் இரண்டு டேபிள் ஸ்பூன் சாதம் தான்; இது உணவிற்கு அபாரமான மென்மையைத் தரும். சாதம் இல்லையெனில் சிறிது ஆப்ப சோடா பயன்படுத்தலாம். இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, குறைந்தது அரை மணி நேரம் அப்படியே ஊறவிடவும். மாவு நன்றாக ஊறிய பிறகு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், குடமிளகாய், கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். காரம் கூடுதலாகத் தேவைப்படுவோர் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயைச் சேர்த்துக் கொள்ளலாம். அடுப்பில் ஒரு சிறிய பேன் அல்லது தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் தடவவும். கல் சூடானதும் ஒரு பெரிய கரண்டி மாவை ஊற்றி லேசாகப் பரப்பவும்.

இப்போது அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஒரு மூடி போட்டு வேகவிடவும். தீ அதிகமாக இருந்தால் அடியில் கருகிவிடும், உள்ளே வேகாது என்பதால் கவனம் தேவை.

மேல் பக்கம் நன்றாக வெந்ததும், மெதுவாக அடுத்த பக்கம் திருப்பிப் போடவும். மறுபக்கமும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயிலேயே சிவக்க விடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்து, உருளைக்கிழங்கின் வாசனையுடன் கமகமவென மணம் வரும்போது வெளியே எடுக்கவும். இந்தச் சுவையான ரவை உருளைக்கிழங்கு அடையைச் சுடச்சுட தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியுடன் பரிமாறினால் அதன் சுவை இரட்டிப்பாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us